சூதுகவ்வும் திரைப்படம் வெளியாகி இன்றோடு (01-05-2013) ஆறு வருடங்கள் ஆகப்போகிறது. நலன் குமாரசாமி, ஸ்ரீனிவாஸ் கவிநயம் இருவரும் கதை எழுதி உள்ளனர். நயன்தாராவுக்கு கோயில் கட்டிய பாபி சிம்ஹா, ஜாக்குவார் காரை திருடிய ரமேஷ் திலக், பெண் ஒருவரால் ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டு வேலையிழந்த அசோக் செல்வன், தனக்குத் தானே ரூல்ஸ் போட்டுக்கொண்டு ரூல்ஸ் பாலோ பண்ணும் கனவு காதலியுடன் வாழூம் கடத்தல்காரன் விஜய் சேதுபதி ஆகிய நால்வரும் கடத்தல் தொழில் செய்கிறார்கள். அவர்களிடம் நம்பிக்கை கண்ணன் என்பவர் நேர்மையான அரசியல்வாதியின் மகனான அருமை பிரகாசத்தை கடத்த சொல்லி கெஞ்ச ப்ராஜக்டை அக்சப்ட் செய்கிறார் விஜய் சேதுபதி. கடத்த சொன்னவர்களை கடத்தினார்களா, நேர்மையான அரசியல்வாதி மற்றுமை அவருடைய மகன் இருவரும் என்ன ஆனார்கள் என்பதே கதை. சீன் பை சீன் சிரிக்க வைக்கும் படம்
* மூடினு இருமா க்ளோஸ்…
* ” பாஸ் டைம் ப்ளீஸ்… ”
” சில்ற இல்லப்பா… ”
* ” எல்லாரும் வேல பாத்து ஆகணுமா… டெய்லியும் திங்னும் பேழனும்… நடுவுல கொஞ்சம் வேல… ”
* ” டெய்லியும் பேப்பர் படிக்குறியா… ”
“அதென்னங்க டெய்லியும் டேட்ட மாத்தி விக்குறாங்க… ”
* ” டெய்லியும் பேப்பர் படிச்சு பாரு மெண்டல் ஆயிருவ… இவன் பொண்டாட்டி அவனோட அவன் பொண்டாட்டி இவனோட… கள்ளக் காதலன் கள்ளக் காதலி… பேங்க் திருட்டு பைக் திருட்டு நகை திருட்டு… போதாதுக்கு சாமியார் மடத்துல நடிகை… நடிகை மடில சாமியாரு… இந்த ஹீரோயினு அந்த ஹீரோவ லவ் பன்றது… அந்த ஹீரோ வேறொரு நடிகைய லவ் பன்றது… அந்த நடிகை வேறொரு டைரக்டர் வச்சிருக்கறது… இதுபோதாதுன்னு சின்ன பசங்க கொல பன்றாங்க தற்கொலை பன்னிக்குறாங்க… 12த் பெயில்னா தற்கொலை டிகிரி பெயில்னா தற்கொல வேல கிடைக்கலனா தற்கொலை கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கலனா தற்கொலை மாப்பிளை கிடைக்கலனா தற்கொலை… ஒரு வேல கல்யாணத்துக்கு பொண்ணு கிடைச்சா டைவர்சு மாப்பிளை கிடைச்சா டைவர்சு தும்முனா டைவர்சு இருமுனா டைவர்சு கொறட்ட விட்டா கூட டைவர்சு… இதுக்கு மத்தில மாமியா மருமகளஇடிக்கறது… மருமக மாமியாள இடிக்கறது… மாமன் மச்சான வெட்றது மச்சான் மாமன வெட்றது.. புடிச்ச பொண்ணு மூஞ்சில ஆசிட் அடிக்கறது… இப்படி நாட்டு நடப்பு எல்லாத்தயும் படிச்சு முடிச்சு மொத பக்கத்துக்கு நாறிப் போய் வந்தின்னு வச்சுக்கோ சென்னைல வெயில் 110 டிகிரினு போடுவான்… ”
* no job posting
* எங்காசுல தான குடிச்சிங்க அப்ப எங்காசுல தான் சாப்டனும்… இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது…
* இதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்தனம் வேணும்… முரட்டுத்தனமான புத்திசாலித் தனம் வேணும்…
இப்படிபட்ட வசனங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன. இந்தப் படத்தின் பிஜிஎம்க்காக சந்தோஷ் நாராயணன் பல விருதுகள் வென்றுள்ளார். பலருடைய ரிங்டோன்களாக இருந்தது இவருடைய கம்னா கம் தீம். மேலும் சிறந்த திரைக்கதை பிரிவில் இந்தப்படம் பல விருதுகளை வென்றுள்ளது.
Be the first to comment on "இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது…! – 6 years of சூதுகவ்வும் !"