பிரபலங்களின் கருத்துக்கள்:
புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது.
இந்தி படிக்கக் கூடாது எனக் கூறும் திமுகவினரின் வீடுகள் முன் போராட்டம் நடத்தப்படும்
– ஹெச்.ராஜா
“சூர்யாவின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது”
– சீமான்
கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும்? அரைவேக்காட்டு தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்.
– அமைச்சர் கடம்பூர் ராஜு
கிராமப்புற ரசிகர்களுக்காக தனது படத்தின் டிக்கெட் விலையை குறைப்பாரா? தங்கள் படத்தின் விளம்பரத்துக்காகவும், அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறார்களா?
– தமிழிசை
8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது
– தினகரன்
பொதுமக்கள் கருத்துக்கள்:
- அகரம் மூலம் சூர்யா 10 ஆண்டுகளுக்கு மேல் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளார். புதிய கல்வி கொள்கை பற்றி கருத்துக் கூற உரிமை உண்டு தமிழிசை மேடம் – தராசு ஷ்யாம்
- கோடிக்கணக்குல பணத்த சம்பாரிச்சு வெச்சிக்கிட்டு ரெண்டு லாரில போஸ்டர் ஒட்டி தண்ணி குடுக்கிறேன்னு போட்டோ எடுத்து போடுறது, சிஸ்டம் சரியில்ல, சட்டசபை தேர்தல்ல நிப்போம்னு வாய் கிழிய பேசிட்டு மக்கள் பிரச்சனைய பத்தி கேட்டா இன்னும் அரசியலுக்கே வரலனு ஓடி ஒளியுறதுனு ஆளுக இருக்கிற காலத்துல சூர்யா மாதிரி ஒருத்தர் தைரியமா புதிய கல்விக் கொள்கையை, நுழைவுத் தேர்வுகளை எதிர்த்து குரல் கொடுத்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
- 20 வருசமா அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன்னு ரசிகர்களை ஏமாத்தி காவி கட்சிக்கு சொம்பு தூக்கற கஞ்சப்பயல்களை விட சூர்யா, கார்த்தி பல மடங்கு மானமுள்ள ஹீரோக்கள். பல ஏழை மாணவ, மாணவிகள் வாழ்க்கைல விளக்கேத்தி வச்சிருக்காங்க.
இதற்கு விதை போட்டது தந்தை சிவகுமார். நல்லா இருக்கட்டும் உங்க குடும்பம்.
Be the first to comment on "புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா கூறியதற்கு இவர்களின் பதில் என்ன?"