இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்துகொள்வோம்! – பவா என்றொரு கதைசொல்லி!

Storytelling for young people by Bava Chelladurai

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி பவா செல்லத்துரை. நிறைய இளைஞர்களை தன் வசீகர குரலால் இலக்கிய உலகிற்கு அழைத்து வரும் இந்த நபரை பற்றி நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். 

பவா செல்லத்துரை : 

தாயார் பெயர் : தனம்மாள்,

சொந்த ஊர் : திருவண்ணாமலை,

படித்த பள்ளிக்கூடம் : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மல்லவாடி, திருவண்ணாமலை மாவட்டம். 

படித்தது : B.Com

” அம்மா நீ ஒரு கிழிந்த பாயில் படுத்துக் கொண்டு…

பறக்கும் கம்பளங்களை பற்றிய கதைகளையே சொன்னாய்… ” என்ற கவிதையை வாசித்த பிறகு புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டு தொடர்ச்சியாக 30 வருடங்கள் பல்வேறு புத்தகங்களை வாசித்து நேசித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தனக்குப் பிடித்த சிறுகதைகளையும் அனைவரும் வாசிக்க வேண்டிய சிறுகதைகளையும் ‘கதை கேட்கலாம் வாங்க ‘ என்ற நிகழ்ச்சியின் மூலமாக வாசகர்களுக்கு சொல்லி வருகிறார். மேலும் பிரபல எழுத்தாளர்களின் நாவல்களை ‘ பெருங்கதையாடல் ‘ என்ற நிகழ்ச்சியின் மூலமாக சொல்லி வருகிறார். 

முதலில் தனது நண்பர்களுக்கு மட்டும் கதைசொல்லிக் கொண்டிருந்தார். பிறகு இவருடைய நெருங்கிய நண்பர் ஜாஷா பீட்டர் என்பவரின் தூண்டுதலால் பொதுஅவையில் கதைசொல்ல ஆரம்பித்தார் பவா. 

‘கதை கேட்கலாம் வாங்க’ என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் சொன்ன கதைகள் : 

  1. எங்கள் டீச்சர் – சுந்தர ராமசாமி
  2. விகாசம் – சுந்தர ராமசாமி
  3. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி
  4. மின்னல் – கி. ரா
  5. பலாப்பழம் – வண்ணநிலவன்
  6. பாம்பும் பிடாரனும் – வண்ணநிலவன்
  7. எஸ்தர் – சிறுகதை
  8. பிரியாணி – சந்தோஷ் ஏச்சிக்கானம்
  9. பிரசாதம் – சுந்தர ராமசாமி
  10. தேவகி சித்தியின் டைரி – ஜெயமோகன்
  11. அறம் – ஜெயமோகன்
  12. யானை டாக்டர் – ஜெயமோகன்
  13. இரண்டு புத்தகங்கள் – அசோகன் செருவில்
  14. சிறிது வெளிச்சம் – கு. ராஜகோபாலன்
  15. சீதை மார்க் சீயக்காய் தூள் – சுந்தர ராமசாமி
  16. கருப்பசாமியின் அய்யா – ச. தமிழ்ச்செல்வன்
  17. பல்லக்கு – ஜெயமோகன்
  18. நகரம் – சுஜாதா
  19. உள்ளிருந்து உடற்றும் பசி – சு. வேணுகோபால்
  20. ஆண்களின் படித்துறை – ஜே. பி. சாணக்யா
  21. நிலம் எனும் நன்னாள் – அ. முத்துலிங்கம்
  22. பிறகு – என். எஸ். மாதவன்
  23. உள்ளக விசாரணை – ஷோபா ஷக்தி
  24. சடல சாந்தி – தெரிசை சிவா
  25. யானை டாக்டர் – ஜெயமோகன்
  26. சிவமயம் – ஜெயமோகன்
  27. ஏழுமலை ஜமா – பவா செல்லத்துரை ( பவா டாக்குமென்ட்ரியில் உள்ளது )
  28. பச்சை இருளன் – பவா செல்லத்துரை ( பவா டாக்குமென்ட்ரியில் உள்ளது )
  29. ருசி – பிரபஞ்சன்
  30. நிலம் – பவா செல்லத்துரை

இன்னும் தொடர்ந்து பல கதைகள் சொல்லி வருகிறார். 

‘பெருங்கதையாடல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் சொன்ன கதைகள் : 

  1. ஜெயகாந்தனின் ” ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் “
  2. எஸ். இராமகிருஷ்ணனின் ” இடக்கை “
  3. கல்பட்டா நாராயணனின் ” சுமித்ரா ” 
  4. தி. ஜானகிராமனின் ” அம்மா வந்தாள் ” 

இன்னும் பல நாவல்கள் சொல்ல இருக்கிறார். அவருடைய அனைத்து பெருங்கதையாடல் நிகழ்ச்சிகளும் யூடூப்பில் கிடைக்கின்றன. 

நடித்த படங்கள் : 

  1. ஜோக்கர்
  2. ழகரம்
  3. சீதக்காதி
  4. பேரன்பு
  5. சைக்கோ
  6. ஜே. கே. எனும் நண்பனின் வாழ்க்கை

எழுதிய புத்தகங்கள் : 

  1. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை ( சிறுகதைகள் )
  2. 19. டி. எம். சாரோனிலிருந்து 
  3. எல்லா நாளும் கார்த்திகை ( கலை ஆளுமைகளுடனான அனுபவங்கள் )
  4. சிறகிசைத்த காலம் ( தொகுப்பு )
  5. நிலம் ( வாழ்வியல் கட்டுரைகள் )
  6. நீர் ( சிறுகதைகள் )

இல்லற வாழ்க்கை : 

எழுத்தாளர் பவா செல்லத்துரையின் இலக்கிய ஆர்வத்தை பார்த்து காதலில் விழுந்தார் கே. வி. ஷைலஜா. வேறு மாநிலம், வேறு மதம், வேறு சாதி என்றபோதிலும் இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டனர். வம்சி, மானசி இவருவரும் இவரது குழந்தைகள். இவரது குடும்பமே இலக்கியத்தை நேசிக்கும் குடும்பம். கோ படத்தில் வரும் ” என் குடும்பம் பெரிது… ரொம்ப பெரிது… ” என்ற வசனம் இவருக்குப் பொருந்தும். 

நெருங்கிய நட்பு வட்டம் : 

பள்ளித் தோழன் : ஜாஷா பீட்டர்

பள்ளித் தோழி : மாலு

மறக்க முடியாத தோழி பெயர் : ஜெயந்தி

மற்ற எழுத்தாளர்கள் மற்றும் திரை ஆளுமைகள் பார்வையில் பவா செல்லத்துரை : 

  1. பெட்ரூம் வரையிலும் ஒரு எழுத்தாளர் வீட்ல போயி படுக்க முடியுதுன்னு அது பவா செல்லத்துரையின் வீட்டில் மட்டும் தான். – எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்
  2. அடுத்தவரை பாராட்டுவது பவாவுக்கு பிடித்தமான ஒன்று, சின்ன விஷியமாக இருந்தாலும் பாராட்ட தவறமாட்டார் – கே. வி. ஷைலஜா

தனது வாசகர்களுக்கு புத்தகங்களில் கையொப்பமிடும்போது ” எளிய அன்போடு ” என்று குறிப்பிட்டுத் தான் கையொப்பமிடுவார். அதுபோலவே எளிமையான அன்பான மனிதர் இவர். இளைஞர்களிடம் இலக்கிய ஆர்வம் அதிகரித்து வருவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். கிட்டத்தட்ட இவருடைய கதைகள் அனைத்துமே மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்படி இவரைப் பற்றி பதிவிட இன்னும் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. 

Related Articles

சிரியாவில் என்ன நடக்கிறது?... சமூக ஊடகங்களைக் கடந்த ஒரு வாரமாக ஆக்கிரமித்து இருப்பது சிரியா உள்நாட்டுப் போர் குறித்த செய்திகள் தான். கொத்து கொத்தாக குழந்தைகளும், பெரியவர்களும் கொன்...
க்ளைமேக்ஸ் டுவிஸ்ட்டுக்காக இந்தப்படத்தை ... சில நாட்களுக்கு முன் வெளியான அயோக்யா டீசரில் நீ தானா அந்தக் குயில் குக்கூ குக்கூ என்று விஷால் பாடியதை வைத்து படம் மொக்கை என்றே கமெண்ட் தெரிவித்து இருந...
உடன்குடி மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட... தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1320 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூப்பர் க்ரிட்டிக்கல் வெப்ப சக்தி திட்டப்பணியை காணொளி கான்பரன்சிங் மூலம் தமிழ...
125 விருதுகளை வென்ற தமிழ் குறும்படம் ... சில தினங்களுக்கு முன்பு திருச்சியை கதைக்களமாகக் கொண்டு சுற்றுப்புறத் தூய்மையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "முதலிடம் நோக்கி" என்ற குறும்படம் சமூக வலைதளங...

Be the first to comment on "இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்துகொள்வோம்! – பவா என்றொரு கதைசொல்லி!"

Leave a comment

Your email address will not be published.


*