ஜெயில் படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

Some interesting information about the jail movie!

இயக்குனர் சங்கரிடம் எடிட்டிங் உதவியாளராக தொடங்கி பின்னர் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்தவர் இயக்குனர் வசந்தபாலன். அவ்வாறு சங்கர் இயக்கத்தில் உருவான ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இவருடைய முதல் படம் “ஆல்பம்” இயக்குனர் பாலசந்தரின் கவிதலயா புரோடக்சன்ஸ் தான் இந்த படத்தை தயாரித்தது.  இந்த படத்தில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இயக்கத்தில் உருவான பாடகர் ஸ்ரேயா கோஷலின் குரலில் உருவான “செல்லமே செல்லம்” பாடல் எல்லோராலும் கொண்டாடப்பட்டது. இந்த படத்திற்கு எழுத்தாளர் எஸ்.  ராமகிருஷ்ணன் வசனங்கள் எழுதி இருந்தார்.

 இதைத்தொடர்ந்து வசந்தபாலனின் இரண்டாவது படமான வெயில் படம் வெளியானது. அந்த படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை வென்றது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசின் சிறந்த தமிழ் படத்துக்கான விருது, சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றது. அதை தொடர்ந்து நான்கு வருட இடைவெளியில் அங்காடித்தெரு படம் எடுத்தார். அந்தப்படமும் விஜய் விருது தமிழக அரசு விருது பிலிம்பேர் விருது ஆனந்த விகடன் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.

அடுத்த இரண்டு வருடங்களில் அரவான் என்றும் அற்புதமான படத்தை எடுத்தார் ஆனால் வெயில் அங்காடித் தெரு ஆகிய இரண்டு படங்களில் பெற்றுத்தந்த புகழ்ச்சியை இந்த படம் பெற்றுத்தரவில்லை. வசூல் ரீதியாக இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.  அதைத் தொடர்ந்து வெளியான காவியத் தலைவன் படம் படுதோல்வி அடைய 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த படமும் வசந்தபாலன் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஜிவி பிரகாஷ் வைத்து ஜெயில் என்ற படம் எடுத்துள்ளார். அந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.

வெயில் படத்தை வசந்தபாலன் எடுத்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களில் வசந்தபாலன் 6 படங்களை மட்டுமே இயக்கி உள்ளார். அந்த ஆறு படங்களும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்கள் என்று கூட சொல்லலாம். 

வசந்தபாலன் மற்றும் ஜிவி: 

  1. வசந்த பாலனுக்கும் ஜீவிக்கும் ஆன உறவு ஜென்டில்மேன் படத்திலிருந்து தொடங்கியது. ஜென்டில்மேன் படத்தில் ஜீவி பாடிய சிக்கு புக்கு ரயிலே பாடலில் இருந்து தான் ஜீவி இசைப்பயணம் தொடங்கியது. அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வசந்தபாலன். அந்த நட்பின் பலனாக வசந்தபாலன் தன்னுடைய இரண்டாவது படமான வெயில் படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக நியமித்தார்.அப்போது ஜீவிக்கு வெறும் 17 வயது மட்டுமே. அதற்கு முன் சீவிக்க பதிலாக இளையராஜாவை இசை அமைப்பாளராக போடலாம் என்று யோசித்து இருந்தார் வசந்தபாலன். இருந்தாலும் ஜீவியின் மன முதிர்ச்சியை பார்த்து இசையமைப்பாளராக நியமித்தனர் வசந்தபாலன்.
  2. ஜிவி பிரகாஷ் குமார் தன் முதல் படத்திலேயே பாடலாசிரியர் நா முத்துக்குமார் உடன் இணைந்து விட்டார். சீவியும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய வெயில் படத்தின் அத்தனைப் பாடல்களும் செம ஹிட். அதிலும் குறிப்பாக வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி என்ற பாடலுக்காக நா முத்துக்குமார்க் கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். அந்த பாடலுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து இருந்தார்கள். இருந்த போதிலும் நாம் முத்துக்குமாருக்கு அந்தப் பாடலுக்காக முதல் முறையாக பிலிம்பேர் விருது கிடைத்தது.
  3. நா முத்துக்குமாரின் மரணம் இயக்குனர் வசந்தபாலன் பெரிதாக பாதிக்காது அவர் தன்னுடைய அடுத்த படமான அநீதி படத்தில் நா முத்துக்குமாரின் கவிதை ஒன்றை பாடலாக உருவாக்க முடிவு எடுத்து முகநூலில் அதற்கான போட்டியை நடத்தி னார் அந்த போட்டியில் இருந்து இரண்டு கவிதைகளை தேர்ந்தெடுத்து 450 பெயரில் இருந்து இரண்டு கவிஞர்கள் தேர்ந்தெடுத்து பாடலை இயற்றியுள்ளார் வசந்தபாலன். 
  4. இந்த படத்தின் தலைப்புதான் ஜெயில் மற்றபடி இந்த படம் ஜெயிலில் நடக்கும் கதை அல்ல வடசென்னை பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார்கள் தங்களது பூர்வீக இடத்தை விட்டு அகற்ற படுகிறார்கள் இதனால்தான் ஜெயில் என்று தலைப்பு வைத்தோம் என்று கூறுகிறார் வசந்தபாலன். 
  5. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் கல்லூரி முதலாமாண்டு மாண வனாக நடித்துள்ளார். ஜெயில் படத்தில் அவருடைய பெயர் கர்ணன். ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் கர்ணன்தான் ஜெயில்  ஜிவி பிரகாஷ் குமார். 
  6. 2020 ஆம் ஆண்டில் ஐகான்ட் பிரீத் என்கிற தனிப்பாடல் ஒன்று கிராமி விருது வாங்கி இருந்தது. அந்தப் பாடலின் அடிப்படையில்தான் ஜெயில் படத்திற்காக நகரோடி என்கிற பாடலை உருவாக்கி உள்ளது ஜெயில் படக்குழு. இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார். அதேபோல பெண் குரலில் பாடி உள்ளார் அனன்யா பட். நகரோடி என்ற வார்த்தையைப் பலரும் சிலாகித்து வருகின்றனர். வெளியாகி 5 நாளில் இந்த பாடல் 12 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.
  7. மேலும் இந்த படத்திற்காக காத்தோடு காத்தாக என்ற பாடலை நடிகர் தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார். இந்த பாடல் யூ டியூபில் இதுவரை 20 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. 

வசந்த பாலனும் எழுத்தாளர்களும்: 

வசந்தபாலனின் தன் முதல் படமான ஆல்பம் படத்தில் எஸ் ராமகிருஷ்ணன், அங்காடித்தெரு படத்தில் ஜெயமோகன், அரவான் படத்தில் சு. வெங்கடேசன் என்று எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனராக வசந்தபாலன் விளங்கி வந்தார். ஆல்பம் படத்திலிருந்து எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் உடன் நெருங்கிய நட்பில் இருக்கும் வசந்தபாலன் அவருடைய அறிவுறுத்தல் பேரில் தான் வடசென்னை பகுதியின் கதையை மையமாக வைத்து ஜெயில் படத்தை எடுத்துள்ளார். நான் வடசென்னைக்காரன் ஆனந்த விகடனில் நான்காம் சுவர் உள்ளிட்ட கட்டுரைகளை எழுதிய எழுத்தாளர் பாக்கியம் சங்கர் தான் இந்த படத்தில் வசனம் எழுதியுள்ளார்.

Related Articles

தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள... சமீபத்தில் முகநூலில் ஒருவர், தனியார் பள்ளியில் வாத்தியார் வேலை பார்ப்பதற்கு பேசாமல் நாலு ஆடு மாடு வாங்கி மேய்க்கலாம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ப...
ஆளுநர் மாளிகையில் மூன்றாவது நாளாக டெல்லி... டெல்லி ஆளுநரைச் சந்திப்பதற்காக நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர...
“ஊர் முழுக்க கட் அவுட்டு! ஊழல் அரச... பேருந்து கட்டண உயர்வை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கட்டண உயர்வை எதிர்த்து முதலில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் க...
” கடவுள் ஒரு சில்றபையன் ” &#... எட்டு வருடங்களுக்கு முன்பு ஆரண்ய காண்டம் எனும் படத்தை தந்தவர். அதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.பசுபதி, சிங்கப் பெருமா...

Be the first to comment on "ஜெயில் படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*