துப்பாக்கிக்கு இரை! – தரமணி படம் பதிவு செய்த கவனிக்க வேண்டிய விஷியம்

Fishermen

கன்னியாகுமரி மீனவர்கள் தற்போது ஓகி புயலுக்கு இரையாகிப்போனதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத சுயநலம் பிடித்த மனிதர்களாகிய நாம் நம்முடைய பாவங்கள் கழிய புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்தை நோக்கி பயணிக்கிறோம். இராமேஸ்வரத்தில் வாழும் மீனவர்களின் குடும்பம் தினம்தினம் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கையில், சகமனிதனின் துன்பத்தை வேடிக்கையாக கடந்து வரும் நாம் மேற்கொள்ளும் இராமேஸ்வர புனிதப்பயணத்தில் என்ன பலன் இருக்கிறது என்பது புரியாத புதிர்.

எவன் வாழ்ந்தால் என்ன வீழ்ந்தால் என்ன சிறப்பு தரிசனத்தில் நமக்காக மட்டுமே கடவுளை வணங்கிவிட்டு வரும் நமக்கு எதுக்கு இதெல்லாம் என்றெண்ணம் கொண்டவர்களுக்குத்தான் இந்த நிமிட கட்டுரை.

இலங்கை இராணுவ படையின் துப்பாக்கிகளுக்கு தொடர்ந்து இரையாகிக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் பற்றிய கருத்தை தனது தரமணி படத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் ராம். விளம்பரத்திற்காக  படத்தின் போஸ்டர்களில் அரசியல் பேசிகிறார் என நினைத்திருந்த நிலையில், படத்தில் ஆழமான அரசியலை பேசி உண்மையாகவே கவனத்தை ஈர்க்கிறார். தங்களுடைய படைப்புகளில் இலங்கை என்றே குறிப்பிடவதற்கு, மற்ற இயக்குனர்கள் தயங்கிகொண்டிருக்கையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றது என்றும், கடந்த ஓராண்டுகளில் மட்டும் 24வது முறை இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், தன்னுடைய படத்தில் காட்சி வரும்படி இயக்குனர் ராம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை சென்னையில் துவங்கும். இந்த சென்னையில் மழைபெய்ய வேண்டி ராமேஷ்வரத்தில் உள்ள மீனவப்பெண்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருப்பார்கள். அப்படி மழை பெய்தால் தான், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் போட்டி ரத்தாகும். ஒருவேளை மழைபெய்யாதிருந்து இந்தியா வெற்றி பெற்றுவிட்டால், ராமேஸ்வர கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருக்கும் இந்த பெண்களின் சொந்தக்காரர்களை இலங்கை ராணுவம் ஓரின வன்புணர்ச்சிக்கு உட்படுத்தலாம், சுட்டுக்கொல்லலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பெண்கள் வேண்டியதால் மழை பெய்ததா இல்லை தானாக மழை பெய்ததா தெரியாது, சென்னையில் மழைபெய்ய தொடங்கும். ஆனால் இந்தியா தோல்வி அடையாமல்டக்வொர்த் முறையில் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட, இலங்கை இராணுவப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர் என்று தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகும். இப்படி தன் கருத்தை அனைவரின் கவனத்தை ஈர்க்கும்படி பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ராம். [ தரமணி படத்தின் துவக்க காட்சியை பார்த்தால் இது தெளிவாக புரியும் இயக்குநர் ராமின் குரலில்.]

இதற்கு முன்பு இனம், மெட்ராஸ் கபே போன்ற படங்கள் தமிழக இலங்கை அரசியலை பேசுகிறேன் என்று எதேதோ பேசி பலரின் எதிர்ப்பை மட்டுமே சம்பாதித்தது. ஏழாம் அறிவு, மரியான் போன்ற படங்கள் இந்த விஷியத்தை சொல்ல முயற்சித்து சொல்லாமல் போனது. ஆனால் தரமணி தன்னுடைய கருத்தை நியாயமாக முன்வைத்துள்ளது.

இதை சொல்ல வேண்டும் என்ற ராமின் எண்ணத்திற்கும், தயாரிப்பாளர் ஜே. சதிஷ்குமாரின் துணிச்சலுக்கும் தமிழர்களாகிய நாம், நிச்சயம் ஒரு ராயல் சல்யூட் அடித்தாக வேண்டும்.

இராமேஸ்வரம் என்றால் புண்ணியதலங்களையும் கலாமையும் நினைவுகொள்ளும் நாம் அங்கு வாழ்ந்து வரும் மீனவர்களை பற்றியும் ஒரு நிமிடமாவது சிந்திக்க வேண்டும். அங்கு வாழ்பவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் என்பதால்!

Related Articles

ரஜினியின் நிஜ அரசியல் வாழ்க்கையிலிருந்து... ரஜினியின் நிஜ வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா என்று சொல்லிவிட்டோம். ஆக இது முழுக்க முழுக்க ரஞ்சித் படமா? என்றால் கிட்டத்தட்ட ஆம...
நொடிக்கு நொடி சிலிர்க்க வைத்த 2.O! ̵... செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிகிறதா? இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லையே... இதை மையமாக வைத்து 500 கோடி போட்டு படம் எடுத்து வச்சிரு...
இதாங்க ஆயிரத்தில் ஒருவன் படத்தோட கதை!... இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே. சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.ஒரு குக்கிராமம்... தற்போதைய தஞ்சாவ...
இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி குறித்து நெ... ஈசியா ஜெயிச்சுடலாம்னு நம்பிக்கையோடு தூங்கப் போனோம்!கடைசில இப்படி ஆகிடுச்சே! 2018 ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றின்...

Be the first to comment on "துப்பாக்கிக்கு இரை! – தரமணி படம் பதிவு செய்த கவனிக்க வேண்டிய விஷியம்"

Leave a comment

Your email address will not be published.


*