நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் “அறம்”. அந்தப் படம் ரிலீசான சமயத்தில் அந்தப் படத்தின் வசனங்கள் மிகப் பெரிய அளவில் கவனம் பெற்றன. இப்போது அந்தப் படத்தில் உள்ள வசனங்கள் இங்கு முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வசனங்கள் இன்றைய காலத்திலயும் பொருந்திப் போகுதா என்று பாருங்கள். இதில் உங்களுக்கு பிடித்த வசனம் எது என்று கமெண்ட் செய்யுங்கள்.
- சம்பளத்துக்காக உத்யோகம் பாக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல…உத்யோகங்கறது உத்யோகத்தின் வழியா மக்களுக்காக வாழறது… வேலை செய்யுறது…
- நான் அதிகாரத்த துஷ்பரயோகம் பண்ணல… ஒருவேலை செஞ்சிருந்தா அது எந்த அளவுக்கு தப்போ அதவிட தப்பு, எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்த நான் பயன்படுத்தாம இருக்கறது… அதுக்கு நீங்க பவர் பாலிடிக்ஸ்னு பேர் வச்சா… நான் அதுக்கு ஆண்டி டெமாக்ரசினு பேரு வைப்பேன்…
- எது டெமாக்ரசினு ஜனங்களுக்காக இவ்வளவு பாடுபடறிங்களோ அந்த ஜனங்களுக்கே டெமோக்ரசிய பத்தி ஒன்னுமே புரியல… அவங்களுக்காக பேசுறதா இருந்தா அது பிரயோஜனம் இல்லாத விஷியம்...
- டெமாக்ரசிய மக்களுக்கு கத்துக் கொடுக்காதது கவுர்மெண்ட் தப்பு இல்லையா…
- ஒரு அரசாங்க அதிகாரியா இருந்துகிட்டு அரசாங்கத்துக்கு எதிரா பேசுறிங்க…
- அரசாங்கம்னா நான் மக்கள்னு நெனைக்கிறேன்.., நீங்க அரசாங்கம்னு எத சொல்றிங்க…
- ஒரு உயிரு என் கண் முன்னாடி போராடிட்டு இருந்தப்ப மனிதாபிமான அதிகாரியா கொஞ்சம் கூட உணர்ச்சிவச படாம நிதானமா என் கடமைய செஞ்சேன்…
- தண்ணி தாகமே எடுக்காத அளவுக்கு சொட்டு மருந்து இருந்தா போட சொல்லுடா…
- நிழலுக்கும் காத்துக்கும் ஒரு மரங்கூட இல்லைன்னா எப்படிடா குடித்தனம் பண்ணுவானுங்க… ஆமா மரத்த வெட்டி கதவும் ஜன்னலும் செஞ்சி வச்சிட்டு கதவ தொறந்துபோட்டு காத்து வரல காத்து வரலன்னா எங்கிருந்து வரும்…
- அந்த டாக்டரு முள்ளு குத்துனாலே மூணு நாளு வர சொல்லுவா… நீ காது வலிங்கற… கண்டிப்பா உன் வீட்டு பத்திரத்த எழுதி வாங்கிடுவா…
- உன்ன கபடி ஆட விடாதவன்… அவன நீச்சலடிக்க விடாதவன் படிக்க மட்டும் விட்டுருவானா…
- அதிகாரிங்க என்ன வேலை பாக்குறாங்கனு ஜனங்க கிட்ட போனா தான் தெரியும்…
- ஏன் இங்கிலீஷ் தெரியாதா? கவுர்மெண்ட் ஸ்கூலா?
- ஒரு பெரிய அதிகாரி வர்றப்ப எப்படி மரியாதை கொடுக்கனும்னு தெரியாதா? எல்லா அதிகாரிக்கும் நாங்க மரியாதை கொடுத்தோம்… ஆனா எங்க பிரச்சினைக்கு எந்த அதிகாரியும் மரியாதையே கொடுக்கல…
- இன்னிக்கு இருக்கற சூழல்ல தண்ணி பிரச்சினைங்கறது சாதாரண பிரச்சினை இல்ல… வெளிப்படையா சொல்லனும்னா திட்டமிட்ட சதி… அதுக்கு நிரந்தரமான தீர்வும் கிடையாது…
- இந்த பூமில எங்கயும் தண்ணி இல்லன்னு எங்களுக்கு தெரியும்… தண்ணி இருக்கற ஒரே இடம் தண்ணி கடைங்க தான்… அவங்களுக்கு எப்படி தண்ணி கிடைக்குதுங்கறது தான் ரகசியம்… இங்க இருக்கற மரத்துல பச்சை இலைய கசக்குனா காய்ஞ்ச இலைய கசக்குன மாதிரி தான் நொறுங்கிப் போகுது… அந்த அளவுக்கு காத்துல ஈரமில்லாம போச்சு… இப்ப நாமெல்லாம் தரைல போட்ட மீனு ஆயிட்டோம்… ஒரு மீன் துள்ளி குதிக்கறத இன்னொரு மீன் அது உயிரோட இருக்கறதா நினைச்சிக்கிடுது… ஆனா இதுதான் கடைசி துள்ளல்னு அதுக்கு தெரியாது… ஒரு காலத்துல ஜனங்க வாந்தி பேதி காலரா வந்து செத்த மாதிரி இப்ப தாகம் எடுத்து கொத்து கொத்தா சாகப் போகுதுங்க… வாந்தி பேதிக்கு கூட மருந்து இருக்குது… ஆனா தாகம் எடுத்து சாகறத தடுக்கறதுக்கு இந்த உலகத்துல என்னம்மா மருந்து இருக்குது… தண்ணி தான் மருந்து… அந்த மருந்து இந்த பூமில இருந்து மறைஞ்சு பல வருசமாச்சு…
- உங்க எல்லோருக்கும் தண்ணி கிடைக்குற வரைக்கும் நான் தண்ணி குடிக்க மாட்டேன்…
- தொடர்ந்து அஞ்சாறு வருசம் மழை இல்லாம போச்சு… அப்ப கூட தண்ணி பஞ்சம் கிடையாது… என்னைக்கு இந்த வாட்டர் பாட்டல் வந்துச்சோ அன்னைக்கு ஆரம்பிச்சுது இந்த தண்ணி பிரச்சினை…
- மக்களுக்கு எது தேவையோ அத தான் சட்டமா ஆக்கனுமோ ஒழிய சட்டத்த உருவாக்கிட்டு அதுல மக்கள அடக்க கூடாது…
- எல்லாத்துலயும் பாலிட்டிக்ஸ்… ஒரு உயிரோட விளையாடறோம்ங்கற குற்ற உணர்ச்சியே இல்லாத இந்த அதிகாரிங்களுக்கு மத்தில இந்த நாடு எப்படி உருப்பட போகுது…
- இவன் வருவான்… அவன் வருவான்னு சும்மா நின்னுட்டு இருந்தோம்… இங்கலாம் எவனும் வரப் போறது இல்ல… குழில விழுந்தது மந்திரி பிள்ளையோ அதிகாரி பிள்ளையோ இல்ல… நம்ம பிள்ள… நம்ம பிள்ளைய தூக்கனும்னா நாம தான் எதாச்சும் பண்ணி ஆகனும்… எல்லோரும் வா… ரோட்டுல போயி உட்காருவோம்… நீ பஸ்ஸ மறி… நீ ட்ரெயின மறி… அதுக்கப்புறம் பார்… என்ன நடக்குதுனு பார்… வருவானுங்க பாரு அப்புறம்…
- தொலைதூரத்துல இருக்கற மக்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லையா… செத்துரனும்… தூரத்துல இருக்கறவன் செத்துறனும்… ஓட்டுகேட்டு வரும்போது தூரம் தெரியாது… ஓட்டு போட்டதும் பொட்டிய பத்திரமா தூக்கிட்டு போறிங்க பாருங்க அப்பயும் தூரம் தெரியாது… ஆனா பிரச்சினைனு சொன்னா மட்டும் தான் தூரமா தெரியுதுல…
- ஏய் புது மிஷின்ப்பா… இந்தியா வல்லரசு ஆனதும் வாங்குன மொத மிஷின பாரு… பாத்துப்பா டேமேஜ் கீது ஆகிட போகுது… அப்புறம் இந்தியாவுக்கு 1400 கோடி நஷ்டம் ஆயிடும்ல… ஒரு கயித்த விடுறதுக்கு ஒரு ஆளு போதாதா.,. எதுக்கு ஒரு கலெக்டரு… ரெண்டு எஸ்பி… ஒன்போது டாக்டருங்க… குழந்தைய காப்பாத்துறதுக்கு ஒரு மிஷின் இல்ல… வந்துட்டிங்க நிமித்துகிட்டு…
- ஜாஹே ஜகாச்சே அச்சா… ஒரு ஜான் கைத்த எடுத்துனு வந்தான் மச்சான்… ஜாஹே ஜகாச்சே அச்சா… கேக்க வந்த எங்கள எல்லாம் கன்னத்துல வச்சான்…
- 100 கோடி பேருக்கும் மேல வாழ்ற ஒரு தேசத்துல கிராமமும் நகரமும் சேர்ந்தே இருக்கு… இதுல கிராம புறத்துக்கு ஒரு மாதிரியான அணுகுமுறை… அந்த மனித உயிர்களுக்கான மதிப்புன்றது வேற… நகர்புறங்களில் வாழ்றவங்களுக்கான உயிர்களுக்கான மதிப்பீடு வேற… அப்படினு பார்க்கனுமா…
இந்தியாவை பொறுத்தவரை அலட்சியத்திற்கு நாம கொடுக்கும் விலை அதிகம்… அலட்சியம் என்பது எப்போதுமே ஒரு சிவில் கேசாக பார்க்கப்படுகிறது… அது ஒரு கிரிமமினல் offense ஆக வெளிநாடுகளை போல நம் நாட்டில் இல்லை…
- உன் புள்ளைய அவனுங்க காப்பாத்த மாட்டானுங்க… அவனுங்ககிட்ட கயித்த தவிர வேற எதுவும் இல்ல… உன் புள்ள மஞ்சள் காமாலை… இல்லைன்னா வாந்தி
பேதி வந்து செத்துடுச்சுனு நினைச்சுக்குடா டேய்…
- வருச வருசம் வீட்டுக்கு வரி, தண்ணிக்கு வரி கேட்டு வர்றீங்கள்ல… ஒரு குழந்தைய தூக்க வக்கு இருக்கா உங்களுக்கு…
- ஒரு விமானத்தை யாரோ கடத்திட்டு போறாங்க அப்படின்னா மொத்த அரசு எந்திரமும் அமைச்சர் பிரதமர்னு எல்லாரும் அதுல என்ன நடக்குதுனு பாக்குறாங்க… ஆனா விவசாயக் கூலி ஒருவருடைய நான்கு வயது குழந்தை உயிருக்கு போராடுற அப்ப அத பெரிய ஆட்கள் யாரும் கண்டுக்கறது இல்ல… இந்த முரண்பாட எப்படி பாக்குறிங்க…
தொடர்ந்து இந்த முரண்பாடு நிலவிக்கொண்டே இருக்கறதா நான் பாக்குறேன்… ஒரு விமானம் தொடர்புடைய செய்திங்கறது அது ஒரு சர்வதேச செய்தியாக மாறுவதும் ஒரு உள்ளூரில் கிராமத்தில் நடக்கும் விஷயங்கள் கண்டுகொள்ளாமல் போவதும் டெல்லியில் ஒரு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட போது அது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகவும் ஆனால் இங்கு மதுரையிலும் தூத்துக்குடியிலும் நாகர்கோவிலிலும் வாடிக்கையாக அது நிகழும்போது அது பேசப்படுவதில்லை என்பதால் உயிர் போகிற இடமும் இங்கு முக்கியம் ஆகிறது.
- ஆளுங்கட்சிகாரன அரெஸ்ட் பண்ணா அது கவுர்மெண்டுக்கு அசிங்கம் இல்லையா…
- பப்ளிக் கன்வின்ஸ் பண்ற அந்த டைம்ல ஒரு அதிகாரியா நீங்க எம்எல்ஏவ மினிஸ்டர தான் நீங்க கன்வின்ஸ் பண்ணிருக்கனும்…
- ஜனங்களோட தேவைகள பூர்த்தி பண்றதுக்குத் தான் எம்எல்ஏ மினிஸ்டர மக்கள் தேர்ந்தெடுக்குறாங்க… அந்த ஜனநாயகத்த இவங்க கேலிக்கூத்து ஆக்கிட்டாங்க…
- அரசியல்வாதிங்க எவ்வளவு தப்பு பண்ணாலும் மக்கள் அவிங்கள தான் நம்புவாங்க… மக்கள் மேல அக்கறை இருக்குற உங்கள மாதிரி நல்ல அதிகாரிங்கள மக்கள் எப்பவுமே புரிஞ்சுக்க மாட்டாங்க…
- நமக்கு மக்கள் ஏன் மரியாத தரனும்… சாதாரண ஜனங்க உங்கள பாத்தா பயப்படனும்… நம்மள பாத்து எந்த பெரிய மனுசனாவது பயந்துருக்கானா… அதுக்காக நீங்க கோவப் பட்ருக்கீங்களா… நாம மரியாத கொடுத்தா அவங்க மரியாத கொடுக்க போறாங்க…
- மூத்திரத்த குடிக்குறோம் மேடம்… ஆம்பள பொம்பள குழந்த குட்டினு கஞ்சிக்கு அலைஞ்ச காலம் போச்சு… இப்ப தண்ணி தண்ணினு லோல் லோல்னு அலையுறோம்…
- 800 கோடி செலவு செஞ்சு ராக்கெட் விட்றாங்க… மொத்த உலகத்துக்கும் அது பலன் தரும் அப்படினு சொல்றாங்க… ஆனா ஒரு ஆழ்துளை கிணறில் விழுந்த ஒரு குழந்தைய காப்பாத்த செய்யும் கருவி சில நூறு ஆயிரங்கள் கூட இருக்காது… ஆனா அந்த ஆயிரம் கூட ஏன் செலவு செய்யப்படல…
ஒரு புறக்கணிக்கப்பட்ட இந்தியாவினுடைய அவலத்துக்கு தேவையான கருவியாக அது பார்க்கப்படுகிறது… அந்த கருவியினுடைய கருவியை கண்டுபிடித்தால் அவருக்கு எந்த ஒரு பெயரும் கிடைக்கப் போவதில்லை… ஒரு கிரிக்கெட் வீரரை ஒரு சினிமா வீரரை தெரிந்து வைத்திருப்பது போல் ஒரு கண்டுபிடிப்பாளரை நாம் ஏன் தெரிந்துகொள்ளவில்லை…
- கண்ணுக்கு முன்னாடி ஒரு உயிர் போகும்… போனா உங்களுக்கு நிம்மதியா தூக்கம் வந்துடுமா…
- நம்ம எப்படியும் காப்பாத்துவோம்னு இந்த ஊர் ஜனங்க நம்மள நம்பிட்டு இருக்காங்க… அவங்க நம்பிக்கைக்கு நாம நேர்மையா இருக்க வேண்டாமா? என்னைய யார் நம்புனாலும் நம்பாம போனாலும் என் கடமையில நான் நேர்மையா இருப்பேன்…
- இந்தியா மாதிரி நாட்டுல ரெண்டு முதலாளிங்க இருக்காங்க… ஒன்னு அரசியல்வாதிங்க… இன்னொன்னு அதிகாரிங்க… மக்களுக்கு என்ன தேவைன்னாலும் நம்மள மாதிரி அதிகாரிங்ககிட்ட வந்து நிக்குறாங்க… ஆனா ஓட்டுப்போட்டு அதிகாரத்த அரசியல்வாதிங்ககிட்ட கொடுத்துர்றாங்க… குழில விழுந்துருக்கறது இந்த க்குழந்தை மட்டுமில்ல… ஜனநாயகத்த நம்பி ஓட்டுப்போட்ட இந்த பாவப்பட்ட மக்களும் தான்…
- அந்த குழந்தைக்கு மட்டும் எதாச்சும் ஆச்சுனா நம்ம உயிரோட இருக்கறது லாம் வீண்…
- தன் புள்ள சாவ நோக்கி போகும்போது புள்ளையோட அம்மா அப்பா உயிர் வாழனும்னு நினைப்பாங்களா…
- ஒரு பெண் கலெக்டர் ஆவுறது சாதாரண விஷயம்… ஆனா இந்த நாட்டுல ஒரு பெண் சுயமா பல ஆண்களுக்கு மத்தில பெண்ணாவே வாழறது ரொம்ப சிரமம்…
- நிலவுக்கு போனவன விட ஆழ்துளை கிணத்துக்குள்ள போய்ட்டு வந்தவன் தான் ரொம்ப முக்கியமானவன்…
Be the first to comment on "அறம் திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!"