கடந்த சில வருடங்களாக மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. செல்போன் டவர்கள் ஊரெங்கும் முளைக்கத் தொடங்கிய காலத்தில் செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் இனத்திற்கு அழிவு ஏற்படும். செல்போன் டவரிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்க உறுப்பை நேரடியாகப் பாதித்து அதன் இனத்தையே அழிக்க வல்லது என்று பொய்யான செய்தியை பரப்பி வந்தனர். அதே போல தான் இன்று கொண்டாடப்பட்டு வரும் சிட்டுக்குருவிகள் தினமும்.
மார்ச் 20 ம் தேதியை சிட்டுக்குருவிகள் தினம் என்பதுமே புரூடா தான். மார்ச் 20ம் தேதியை எந்த அமைப்பும் சிட்டுக்குருவிகள் நாள் என்று அதிகார பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் இந்த நாளை சிட்டுக்குருவிகள் தினம் என்று கொண்டாடப்பட்டு வருவதற்கு முக்கிய காரணம் முகமது திலாவர் என்ற பறவை ஆர்வலர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்தவர் முகமது திலாவர். செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது என்ற தகவல்கள் பரவியதற்கு முக்கிய காரணம் இவர் தான். இவரது பிறந்த நாளையை சிட்டுக்குருவிகள் தினமாக கடந்த 2010ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் கூறிய செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் பாதிக்கப்படுகிறது என்ற தகவல் அறிவியல் பூர்வமாக உண்மையில்லை என்றாலும் சிட்டுக்குருவிகள் மீது அவர் கொண்டிருந்த காதல் அலாதியானது.
பறவைகளை நேசியுங்கள்
வீட்டுமனைகள் பல்கிப் பெருகி வருவதால் பறவைகளின் நிலைமை கவலைக்குரியதாக மாறி இருக்கிறது. குறிப்பாக நமது தேசிய பறவை மயிலின் நிலைமையோ சொல்லி மாளாது. தனது குஞ்சுகளிடன் சாலைகளில் சுற்றித்திரிக்கிறது. இதைவிட கொடுமை டெல்லியின் மாநிலப் பறவை சிட்டுக்குருவி. அதே டெல்லி காற்று மாசுபாட்டில் முதலிடம் வகிப்பது. கோடை தொடங்கிவிட்டது. இனி உங்கள் வீடுகளில் தானியங்களையும் தண்ணீரையும் வைத்து அவற்றை பாதுகாக்க முற்படுங்கள்.
Be the first to comment on "செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிறது என்பது மட்டுமல்ல இன்று சிட்டுக்குருவிகள் தினம் என்பது கூட புரூடா தான்!"