ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு ராகவா லாரன்ஸ் செய்த நல்ல காரியம் என்று தான் முதலில் தலைப்பு வைக்க தோன்றியது. ஆனால் மாற்றிவிட்டோம். சின்ன கட்டுரை தான் பொறுமையாக படிக்கவும்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடனக் கலைஞர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனம் மற்றும் இல்லாமல் இயக்கம் நடிப்பு என்று பல துறைகளில் வித்தைக்காரராக இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா பாகம் 2 ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் ராகவா லாரன்ஸுக்கு மக்களிடையே தனி மதிப்பு உண்டு.
அவர் தன்னுடைய சொந்த தாய்க்கு கோயில் கட்டி வணங்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அதுமட்டுமின்றி தன்னுடைய அன்பு இல்லத்தில் வசிக்கும் ஊனமுற்ற குழந்தைகளை அவர் சிறப்பாக கவனித்து வருகிறார். நிறைய ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளை இளைஞர்களை அவர் திறமைசாலிகளாக பல மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். நிறைய ஊனமுற்றவர்கள் தங்களது நடனத் திறமையை காட்டி பலரிடம் பாராட்டு பெற்று இருக்கிறார்கள். அப்படி நல்ல மனம் கொண்ட ராகவா லாரன்ஸ் ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு நிஜ செங்கேணிக்கு ஒரு உறுதியை கொடுத்துள்ளார்.
ஜெய்பீம் படத்தில் கதையின் நாயகன் நாயகியாக ராஜாக்கண்ணு மற்றும் செங்கேணி என்பவர்கள் காட்டப்பட்டார்கள். அந்த படத்தில் எந்த குற்றமும் செய்யாத ராஜா கண்ணு என்பவரை போலீஸ்காரர்கள் அழைத்துச் சென்று பொய் கேஸ் போட்டு அடித்தே கொன்றுவிடுவார்கள். அதனை எதிர்த்து அவருடைய மனைவி செங்கேணி வழக்கு தொடுத்து வெற்றி காண்பார். இதை ஜெய்பீம் படத்தின் மையக் கருத்தாக வைத்து இருந்தார்கள். இவர்களின் கதை, படமாக பார்த்த மக்களிடையே பெரிய மனமாற்றத்தை பெரிய மன வலியை உண்டாக்கி உள்ளது என்று கூறலாம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்த நடிகர் சூர்யா இருளர் இன மக்களுக்கு ரூபாய் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் ராஜாக்கண்ணு மனைவி பார்வதி என்பவருக்கு தன்னுடைய செலவில் சொந்தமாக ஒரு வீடு கட்டித் தருகிறேன் என்று உறுதிமொழி கொடுத்துள்ளார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராகவா லாரன்சை பலரும் பாராட்டி வருகின்றனர். ராகவா லாரன்ஸ் இப்படி கூறியிருக்கிறார் என்ற போதிலும் சூர்யா கொடுத்த ஒரு கோடி ரூபாய் என்ன ஆனது என்றும் ஜெய்பீம் படத்தில் காட்டப்பட்டது போல் நிஜத்தில் ராஜா கண்ணுவின் மனைவிக்கு ஏன் வீடு கட்டித் தரவில்லை அரசாங்கமே இதை செய்யாதா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Be the first to comment on "ஜெய் பீம் ராஜாகண்ணு மனைவிக்கு அரசாங்கம் வீடு கட்டி தராதா?"