கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த திமுக மாநாட்டில் யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்று தவறுதலாகப் பழமொழியை மாற்றி வாசித்து நெட்டிசன்களுக்கு இரையானார். இருப்பினும் பூனை மேல் மதில் போல என்று அதற்கடுத்த நாளே தவறுதலாக ஒரு பழமொழியைச் சொல்லி மீண்டும் வலையில் மாட்டிக்கொண்டார். அப்படி நெட்டிசன்கள் ஸ்டாலின் பழமொழிகள் என்று டிரெண்ட் செய்து குவித்த கலாய் பழமொழிகள் இங்கு குவிக்கப்பட்டுள்ளது. படித்து முடித்த பிறகு நீங்கள் தலை சுற்றி கீழே விழுந்தாலோ அல்லத மண்டையைப் பிய்த்துக்கொண்டாலோ அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது. குறிப்பாக இந்தப் பழமொழிகளை வெறுப்புணர்ச்சியுடன் படிக்காமல் நகைச்சுவை உணர்வுடன் படிக்க வேண்டும்.
#ஸ்டாலின்_பழமொழிகள்
* பாம்பை சுற்றிய கால் கடிக்காமல் விடாது
* சும்மா கிடந்த ஆண்ட்டியை ஊதி கெடுத்தானாம் சங்கு..
* கை சுட்டதடா..சட்டி விட்டதடா…
* வெத்தல பாக்கு கைல செத்தவன கொடுத்தமாதிரி
* புஷ்பலதா மடியிலே அரசமரத்து அடியிலே ….
* வைகோ வருவார் முன்னே டெபாசிட் போகும் பின்னே…
* பொன்னுவதெல்லாம் மின்னல்ல.!
* பூனைக்கு பிறந்தது புலி ஆகுமா !!
* தென்னைய பெத்தா இளநீரு ஸ்டாலினை பெத்தா கண்ணீரு – கலைஞர்
* உனக்கு வந்தா தக்காளி சட்னி எனக்கு வந்தா இரத்தம்
* இரும்பு ஊற எறும்பும் தேயும்
* கைக்கு எட்டாதது வாய்க்கு எட்டியது
* காரம் சிறுத்தாலும் கடுகு போகுமா?
* ஒரு அரிசி சோற்றுக்கு ஒரு பானை பதம்
* வெள்ளத்துக்கு மேல் தலை போய்விட்டது
* உன் வீட்டு புள்ளைய ஊட்டி வளத்த ஊரான் வீட்டு புள்ள கொடைக்கானல்ல வளரும்
* வேட்டியிலிருந்த ஓணானை எடுத்து வேலியில் விட்டு விட்டார்கள்..
* அம்மிகாத்துல ஆடியேபறக்குது
* அம்மிக்கல் அடித்தால் அடியும் நகரும்
* தூற்றுள்ள போதே காற்றிக்கொள்
* காரம் சிருத்தாலும் கடுகு குறையாது
* புகை இல்லாமல் நெருப்பு எரியாது
* சங்கு காதுல செவிடன் ஊதன மாதிரி…
* அண்ணன் தம்பி உதவுற மாதிரி அடி உதவார்.
* அமாவாசை வரும் வரைக்கும் ஐயர் காத்திருப்பாரா …
* புளிக்க புளிக்க பாலும் பழகும்
* சந்தை முற்றினால் கத்திரிக்காய்க்கு வந்து தானே ஆகணும்
* புல்லுக்கு பசித்தாலும், புலியை தின்னாது
* அடிக்கும் ஆணை சறுக்கும்.!
* கால்வாயைத் தாண்டுவானா.. கடலைத் தாண்டாதவன்?
* புருசனை நம்பி அரசனை கைவிட்டது போல
* பூசாரியே புல்லட்டில் போவுதாம் சாமிக்கி சைக்கிள் கேக்குதாம்..
* பனை மரத்தடியில் நின்று கள் குடித்தாலும் பால் என்றே சொல்வார்கள்!
* நடுவீட்டில் குளிப்பாட்டி நாய் வைச்சாலும் கண்டதை தான் திங்கும்
* நாரோடு சேர்ந்த பூவும் நாறும்??
* எரிகிற தூண்டுகோலானாலும், விளக்கு வேண்டும்
* பால் நழுவி பழத்தில் விழுந்தது போல
* குஞ்சு மிதித்து கோழி சாகுமா??
* அளந்து போட்டாலும் ஆத்துல போடணும்
* சோறு ஊற்றி குழம்பு போடு
* இருண்டவன் பேய்க்கு அரண்டதெல்லாம் கண்…
* பிச்சை எடுத்தானாம் அனுமாரு.. அத புடுங்கி தின்னானாம் பெருமாளு
* அந்தரத்தில தொங்குதாம் கோபாலு அத அனாந்து பார்த்துச்சாம் வௌவாலு
* படியாத மாடு அடியாது
* குணம் இருக்கும் இடத்தில் தான் கோபம் இருக்கும்.
* கால் தெரியாமல் ஆழம் விடாது…
* எரிகிற தூண்டுகோலானாலும், விளக்கு வேண்டும்
* சும்மா கிடந்த ஆண்ட்டியை ஊதி கெடுத்தானாம் சங்கு..
உளறல் ஏன்?
சிரிப்பிற்கு அப்பாற்பட்டு இவற்றில் கவனிக்க வேண்டிய சில விஷியங்கள் உள்ளது. அது தற்போதைய அரசியல்வாதிகளின் பதற்றம். இயல்பாகவே சிலருக்கு மேடையில் புதிதாக பேசும்போது பதற்றித்தின் காரணமாக நாக்கு உளறும். அவர்கள் மேடைக்கு புதிது என்பதால் அப்படி. ஆனால் பல மேடைகளை சந்தித்த தற்போதைய அரசியல்வாதிகள் உளறுவது தான் நகைப்புக்குரியது. கேள்விக்குரியது. முதலில் விஜயகாந்த் இதை தொடங்கி வைத்தார். அவர்
அப்படி வார்த்தைகளை குழப்பி அடித்து பேசியதற்கு உடல்நலக் கோளாறால் உண்டான பதற்றம்,
மற்றும் மீடியாக்கள் தந்த பிரசர். அப்போதெல்லாம் இதோ பாருடா கோமாளி என்று கேலி செய்த
அரசியல்வாதிகள் இன்று அதே நிலைமையை சந்தித்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்றார். அதே போல இன்னொரு அமைச்சர நடிகைகளின் பெயரை பார்த்து வாசிக்கும் போதே தவறாக வாசித்தார். ஆளுங்கட்சி அமைச்சர்கள் உடல்நலக்கோளாறால் உண்டான பதற்றத்தால் அப்படி பேசினார்களா, வயது முதிர்வால் அப்படி பேசினார்களா, ஊடகத்தின் அழுத்தத்தால் அப்படி பேசினார்களா, அல்லது அவர்களை ஆட்டிப்படைக்கும் மத்திய அரசு தரும் அழுத்தத்தால் அப்படி பேசினார்களா என்று
தெரியவில்லை. சமீபத்தில் முதல்வர் கண்புரை சிகிச்சை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுங்கட்சி அமைச்சர்கள் தான் ஒரு பக்கம் தினகரன் தரும் பிரசராலும், மறுபக்கம் மத்திய அரசு
தரும் பிரசராலும் இப்படி பேசுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் எதிர்க்கட்சி தலைவரும்
இதே தவறை செய்துகொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு அனிதாவை சரிதா என்றும்
டிசம்பர் 15 சுதந்திர தினம் என்றும் ஜனவரி 25 குடியரசு தினம் என்றும் ஜன,கன,மன – நாட்டுப்புற
பாடல் என்றும் உளறிக்கொட்டியுள்ளார். இவருக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற பிரசரா
அல்லது அவரது உடல்நலக்கோளாறால் உண்டாகிற பதற்றமா அல்லது அவரது தந்தை குறித்த
பதற்றமா அல்லது உட்கட்சிப் பூசலா என்று தெரியவில்லை. ஒரு பக்கம் ரஜினி கமல் அரசியல்
வருகை இருதரப்பினருக்கும் பதற்றத்தை உண்டாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே! – #ஸ்டாலின் பழமொழிகள் கலாய் தொகுப்பு"