கருவிலயே குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை
நிரந்தரமாக மூடுங்கள் அல்லது இப்பகுதியில் வசிக்கும் எங்களை கருணைக்கொலை செய்து
விடுங்கள் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்துள்ளனர் அப்பகுதியில் வசிக்கும்
பெண்கள்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை வெளியேற்றும் நச்சுப்புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
இதனால் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பள்ளிகூடங்களிலயே
குழந்தைகள் அடிக்கடி மயங்கி விழுகின்றனர்.ஆலை இருக்கும் பகுதியைச் சுற்றியுள்ள
குடியிருப்புகளில் புற்றுநோய் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. கைக்குழந்தைக்கு கூட இதயத்தில் ஓட்டை விழுந்து தினமும் ஆஸ்பத்திரிக்கு அலைந்து திரிய வேண்டியுள்ளது. அது மட்டுமின்றி மூட்டுவலி, ரத்தச்சோகை என்று அனைத்து நோய்களும் தற்போது வரத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு பல பெண்கள் தங்களது பிரச்சினைகளை முன்வைத்து போராடி வருகின்றனர்.
இதுகுறித்த எந்த ஒரு நடிவடிக்கையும் மாவட்ட ஆட்சியரால் இதுவரை எடுக்கப்படவில்லை.
தற்போது எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று கூறியிருப்பது அனைத்து
தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Be the first to comment on "ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் எங்களை கருணைக் கொலை செய்துவிடுங்கள்! – தூத்துக்குடி பெண்கள்"