மண்டைக்காடு புதூர், குறும்பனை, கொட்டில்படு, நீரோடி, வள்ளவிளை, இரயுமன்துறை, தூத்தூர் மற்றும் போத்துறை உள்ளிட்ட கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் வீடுகள் சேதத்திற்கு உள்ளாகின. இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான கிராம வாசிகள் அருகிலுள்ள மூன்று நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். நிவாரண முகாம்களை மாவட்ட ஆட்சியர் பிரஷாந்த் ஆய்வு செய்தார்.
நிவாரண நடவடிக்கைகள்
அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் அல்லிகள் மற்றும் பிள்ளைத்தோப்பு ஆகிய இடங்களிலும், விளவங்கோட்டில் இருக்கும் கொல்லங்கோடு ஆகிய இடத்திலும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். 36 பேர் அல்லிகளில் இருக்கும் திருமண மண்டபத்திலும், 30 பேர் பிள்ளைத்தோப்பு முகாமிலும் மற்றும் 34 பேர் கொல்லங்கோடு முகாமிலும் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வீடுகள் சேதம்
ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணியில் இருந்தே தேங்காப்பட்டணம் கிராமத்தில் மின்வசதி துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மடைக்காடு புதூர், குளச்சல், அல்லிகள் மற்றும் தேங்காப்பட்டணம் போன்ற பகுதிகளில் மின்வசதியும், சாலைப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. குறும்பனையில் நான்கு வீடுகளும், வள்ளவிளையில் மூன்று வீடுகளும், கொட்டில்பாட்டில் ஒரு வீடும் சேதமாகி இருக்கின்றன.
கடல் நீர் சாலைகளில் புகுந்த போது, இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. அல்லிகள், பிள்ளைத்தோப்பு, தேங்காப்பட்டணம், மிடாலம், வள்ளவிளை ஆகிய பகுதிகளில் இருக்கும் 60க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் நீரில் மூழ்கின.
அல்லிகள் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு சேதமடைந்து இருக்கிறது. மிடாலம் பகுதியில் ஒரு படகு காணாமல் போயிருக்கிறது. மீனவர்களுக்குக் கடல் கொந்தளிப்பு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்ததால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கடற்கரைக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளையும் காவல்துறை தடுத்து வைத்திருக்கின்றனர். திருப்பாலைக்குடியில் ஒரு கிலோ மீட்டர் அளவுக்கும், அக்னிதீர்த்தத்தில் 200 மீட்டர் அளவுக்கும் கடல் விலகிச் சென்றிருக்கிறது. பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டனர். நாட்டுப்படகு மீனவர்கள் காவல்துறையின் எச்சரிக்கையை அடுத்து கடற்கரையில் இருந்து விலகியே இருந்தனர். தமிழ்நாடு அரசு அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை ஆண்டே மீனவர்களுக்கும், பொது மக்களுக்கும் கடல் சீற்றம் தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
Be the first to comment on "கன்னியாகுமரி கிராமங்களில் வெள்ளத்தால் எட்டு வீடுகள் சேதம்"