சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு தூக்கு தண்டனை!

chengalpattu-court-delivers-judgement-today-on-haasini-murder-case

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அதற்கான தண்டனை பற்றிய விவரங்கள் ஓராண்டு ஆன பிறகு கிடைத்துள்ளது.

சிறுமி ஹாசினி வீட்டின் அருகில் வசித்து வந்த தஷ்வந்த் என்பவருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருந்தது தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார்.

தலைமறைவானவரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்‌தது. விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு மீண்டும் தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹாசினி  கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14ஆம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடத்தல், பாலியல், கொலை, மிரட்டல் என்று ஐந்து வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தஷ்வந்தை குற்றவாளி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் தண்டனை பற்றிய விவரங்களை ஒரு மணிநேரத்திற்கு ஒத்தி வைத்தது. பிறகு நீதிபதி வேல்முருகன் தஷ்வந்த்க்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த சிறுமியின் தந்தையை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் “கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை” என்று தெரிவித்தார். ஹாசினியின் வழக்கறிஞரோ தஷ்வந்த்தின் வயது இருபதுகளில் இருப்பதால் தூக்கத்தண்டனைக்குப் பதிலாக இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என தெரிவித்திருந்தார். ஆனால் ஹாசினியின் பெற்றோர் விருப்பபடியே தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

Related Articles

தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்கள் படும்பா... தாய்மொழிப்பற்றின் காரணமாகவும் போதிய வசதி இல்லாததாலும் நமக்கு வாய்ச்சது இதுதான் என்று தமிழ்மீடியத்தில் படித்த இளைஞர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள்...
நடிக்க தெரியாத நடிகர் சிம்பு! –  இ... நடிகர் சிம்புவின் படங்கள் எப்போது தொடங்கும் எப்போது முடியும் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாத சூழல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.  அப்படியிருந்த...
ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட சிஎஸ்கே ரசிகர... ஐபிஎல் தொடர் 11வது சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கான போட்டியின் போது, ஆட்டம் தொடங்கிய சில நிமிடங...
ஜெயகாந்தனிடம் பத்து கேள்விகள்!... எழுத்து துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் வரவில்லை. எங்கோ போய்க்கொண்டிருந்த வழியில் எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதி பத்தி...

Be the first to comment on "சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு தூக்கு தண்டனை!"

Leave a comment

Your email address will not be published.


*